கோகுலாஷ்டமி 👉 மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகத்தில் வந்து பிறந்தநாளே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி 2020 எப்போது? 👉 ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. வழிபடும் முறை : 🙏 கிருஷ்ண ஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்து விளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலை பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும். 🙏 கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் த...