Posts

Showing posts with the label Festivals

ஆடிப்பெருக்கு.. இந்நாளில் என்ன செய்கிறார்கள்?

Image
ஆடிப்பெருக்கு.. இந்நாளில் என்ன செய்கிறார்கள்? 👌 ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். நதியை பெண்ணாக வணங்கும் நாள்! 👌  அந்த வகையில் இன்று (02.08.2020) ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சுமங்கலி பூஜை : 👌  ஆடிப்பெருக்கு நாளில் பல்வேறு விதமான வழிபாடுகளை செய்கிறார்கள். அதில் சுமங்கலி பூஜையும் நடக்கிறது. 👌  இந்த சுமங்கலி பூஜை, திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும் நடத்தப்படுகிறது.

ஆடி பெருக்கும் அறிவியலும்!!

Image
அறிவியலும், மாங்கல்ய கயிறு மாற்றுவதன் ரகசியம்? 👉 அறிவியல் ரீதியாக பார்த்தோமானால் மஞ்சள் என்பது கிருமிநாசினி ஆகும். மஞ்சள் தடவிய கயிற்றை ஆடிப்பெருக்கு அன்று மாற்றிக் கொள்வதன் மூலம் கிரகங்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மற்றும் கிருமிநாசினியாக செயல்படும் மஞ்சள், பெண்களுக்கு ஏற்படும் பலவிதமான ஆரோக்கியம் சார்ந்த இன்னல்களில் இருந்து காக்கும் வண்ணமாக அமைந்துள்ளது.  👉 மேலும், அன்றைய தினத்தில் உறவினர்களுடன் கூடியிருக்கும் சூழலில் அவர்களின் மனமும் மகிழ்ச்சியான சூழலில் இருப்பதினால் கிருமிநாசினியும், அவர்களுடன் இணைந்து அவர்களை பாதுகாக்கும் அரணாக செயல்பட துவங்குகின்றது.  👉 இதுவே ஆடிப்பெருக்கு அன்று மாங்கல்ய கயிறு மாற்றுவதன் ரகசியம் ஆகும். ஆகவே சுமங்கலி மற்றும் கன்னி பெண்கள் யாவரும் இந்நாளை தவறவிட வேண்டாம். 

ஆடிப்பெருக்கு என்றால் என்ன? எப்படி கொண்டாடலாம்?

Image
ஆடிப்பெருக்கு என்றால் என்ன? 👉 ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். நதியைப் பெண்ணாக வணங்கும் நாள்!  👉 அன்று புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக்கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.  👉 இந்த தினத்தில் செய்யப்படும் மங்கள காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம். வீட்டில் இருந்து ஆடி 18ஐ  எப்படி  கொண்டாடலாம்? 👉 வீட்டில் பூஜை செய்ய ஒரு இடத்தை தேர்வு செய்து கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். 👉 ஒரு தாம்பாலத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமாங்கல்யச் சரடு என்று பெண்கள் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைக்க வேண்டும். 👉 பின்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வ...