Posts

Showing posts with the label Kurukshetra War

அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்ட இந்த நாள் தான் பதினெட்டாம் போர் என்று அழைக்கப்படும் ஆடி 18 ஆம் நாளாகும்.

Image
குருச்ஷேத்திரப் போ ர் குருச்ஷேத்திரப் போரின் முதல் நாள், பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்பட்டனர். பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப், போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணர் ஆலோசனை கூறினார். கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்க்களத்திற்கு அனுப்பினர்.  இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அர்ஜூனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப்படுக்கையில் கிடத்தினான். இப்படி தொடர்ந்து 15 நாள் போர் நடக்க ஒவ்வொருவராக போரில் இறந்து கொண்டே வந்தனர். 16ஆம் நாள் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான். கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப்படைகளைக் கொன்றான். அர்ஜூனன் தனது கூர்மையான அம்புகளால்...