🙏கிருஷ்ண ஜெயந்தி🙏
🙏 கோகுலத்து கண்ணனை விரதமிருந்து🌟 வீட்டிற்கு வரவேற்க தயாராகிவிட்டீர்களா?💥 🙏கிருஷ்ண ஜெயந்தி🙏 மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. அதன்படி நாளை கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. எப்படி விரதம் இருக்க வேண்டும்? கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் உட்பட எந்தவொரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதம் இருப்பது வழக்கம். சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் நள்ளிரவில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின் தான் விரதத்தை முடிப்பது வழக்கம். நீர், உணவு சரியான நேரத்தில் எடுத்து கொள்ளாவிட்டால், உடல் நிலை பாதிக்கப்படும் என்பதாலும், பலர் பணிக்கு செல...