கிருஷ்ண ஜெயந்தி - கோகுலாஷ்டமி


 கோகுலாஷ்டமி

👉 மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகத்தில் வந்து பிறந்தநாளே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி 2020 எப்போது?

👉 ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது.

வழிபடும் முறை :

🙏 கிருஷ்ண ஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்து விளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலை பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும்.

🙏 கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார். இதனால், அவருக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், அவல், நாவற்பழம், கொய்யாப்பழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நைவேத்தியமாக படைக்க வேண்டும். வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

🙏 அன்று காலையில் இருந்து ஸ்ரீமந் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரது படத்திற்கு தூவ வேண்டும். தூப தீபம் (பத்தி, கற்பூர ஆரத்தி) காட்ட வேண்டும். பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

🙏 கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் சிறுவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு புத்தசாலித்தனம் கூடும். புரிந்து கொள்ளும் ஆற்றல், திறமை அதிகரிக்கும்.🔢 எண்கணிதத்தின் அடிப்படையில் பெயர் வைக்கும் பொழுது சில குறிப்புகளை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் பெயர் வைக்க வேண்டும்.

அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!!

Comments

Popular posts from this blog

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | New update from Go...

Welcome to Arivom Ulagai அறிவோம் உலகை