கல்லடிப் பட்டாலும் கண்ணடிப் படக்கூடாது என்பது ஏன்?


👀கல்லடிப் பட்டாலும் கண்ணடிப் படக்கூடாது?ஏன்?👀


👉 நம்மை ஒருவர் பொறாமையோடு பார்ப்பதே கண்திருஷ்டி ஆகும். மனிதனின் பார்வைக்கு சக்தி அதிகம். அதனால் தான் கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்ற பழமொழியை பெரியவர்கள் தங்களது அனுபவத்தை வைத்துச் சொல்லி இருக்கிறார்கள். 

👉 பொதுவாக நம்மீது மற்றொருவர் பொறாமை எண்ணங்கள் கொண்ட சிந்தனையுடன் பார்க்கும் பார்வையின் தாக்குதல் நம்மை வந்து சேராமல் இருக்க வேண்டுமானால், அவர்களின் ஒட்டுமொத்த சிந்தனையையும், பார்வையையும் வேறு எதன்மீதாவது படும்படி செய்ய வேண்டும். 

👀கண் திருஷ்டி படாமல் இருக்க  என்ன செய்யலாம்?👀


👉 புதிய வீடு கட்டியிருந்தால், வீட்டின் மேலும், வீட்டில் வசிப்பவர்களின் மீதும் கண்திருஷ்டி படாமல் இருக்க வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைக்கலாம்.


👉பொறாமையுடன் நம் வீட்டைப் பார்ப்பவர்கள், முதலில் வீட்டைப்பார்ப்பதற்கு முன்பாக, பாத்திரத்தில் உள்ள மலர்களைத்தான் பார்ப்பார்கள். அவர்களுடைய சிந்தனை முழுவதும் அந்த மலர்களைப் பார்ப்பதிலேயே போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராது. 



👀 கண் திருஷ்டியை எடுக்கக்கூடிய குணங்கள் குறிப்பாக தாவரங்களுக்கு நிறைய உண்டு. 

👉 தொங்கும் தோட்டம் அமைப்பது.

👉 ரோஜா முட்கள் உள்ள செடி வைப்பது.

👉 பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவது.

👉 வீட்டின் நுழைவாயிலில் முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டி வைக்கலாம்.

👉 கற்றாழையைக் கட்டித் தொங்க விடுவது போன்ற சிறு சிறு பரிகாரங்களைச் செய்வதன் மூலமாக மனிதர்களின் கண்திருஷ்டியில் இருந்து தப்பலாம்.


👀  மனிதர்களுக்கு மட்டுமல்ல செய்தொழில் இடங்கள் முதல் வசிக்கும் வீடு வரை அனைத்துமே கண் திருஷ்டிக்கு உள்ளாக கூடும். அதனால் தான் அமாவாசை தினங்களில் பூசணிக்காயில் திருஷ்டி வைத்து கழிப்பது வழக்கம்.

Comments

Popular posts from this blog

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | New update from Go...