இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!.


உலகத்தில் விலை மதிக்க முடியாத ஒன்று நட்பு. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!!

👍 இன்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

👍 நண்பர்களால் மட்டுமே சாதி, மத வேறுபாடு இன்றி பழக முடியும். 

வரலாறு :

👏 தெற்காசியாவில் விடுமுறையை ஊக்குவிப்பவர்கள் 1935 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தோன்றிய நண்பர்களின் நினைவாக ஒரு நாளை அர்ப்பணிக்கும் பாரம்பரியத்தை காரணம் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையில் 1919 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்று கருதப்படுகிறது. நட்பு தினத்தில், பூக்கள், அட்டைகள், மணிக்கட்டு பட்டைகள் மற்றும் பரிசுப் பொருட்களை இந்த சந்தர்ப்பத்தில் நண்பர்களுடன் பரிமாறிக் கொள்வது ஒரு பிரபலமான பாரம்பரியமாக உள்ளது.

👏 1930 ஆம் ஆண்டில் ஹால்மார்க் அட்டைகளின் நிறுவனர் ஜாய்ஸ் ஹால் என்பவரால் நட்பு நாள் உருவானது, ஆகஸ்ட் 2 மக்கள் தங்கள் நட்பைக் கொண்டாடிய நாளாகும்.

👏 1935ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றம், காங்கிரசு, ஆகஸ்ட் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை தேசிய நண்பர்கள் தினமாக அறிவித்தது. அன்று முதல், தேசிய நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவது ஓர் வருடாந்திர நிகழ்வாக மாறியது.

👏 உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

“நட்பு”

சாதிசான்றிதழ் கேட்கும் பள்ளியிலும்
வருமான சான்றிதழ் கேட்கும் கல்லூரியிலும்

சாதி வருமானம் அறியாமல் உருவாகிற உன்னதம் தான்இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...!

"நட்புக்காக"

நட்புக்கு எல்லைகள் இல்லை
ஆனால் இலக்கணம் இருகின்றது

இலக்கணமில்லா மொழிகள் பல
காணாமல் போன வரலாறுண்டு

கிளைகளை வெட்டிவிடாத
மரங்கள் வீழ்ந்துபோன நிகழ்வுண்டு

செழிப்பாய் வளரும் தமிழ்போல
இலக்கணத்தோடு நட்பு வளரட்டும்

நட்புகளுக்கு தேன்தொறிந்த
மலர்களின் வாசத்தோடு….

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!.

Comments

Popular posts from this blog

How to Get Digital Driving License? | How to sign up Digilocker app? | A...

How to Check PVC Plastic Aadhar Card Status Tamil using MOBILE PHONE & L...